விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (10:33 IST)
விஜய் சேதுபதி பேமிலி மேன் தொடரின் இயக்குனர்கள் இயக்கத்தில் புதிய வெப் சீரிஸில் நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர். இதையடுத்து இயக்குனர்கள் ராஜ் &டிகே மற்றும் சமந்தாவுக்குக் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த இயக்குனர்களின் அடுத்த தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்த தொடரில் ஷாகித் கபூர் உள்ளிட்டவர்கள் நடிக்கும் நிலையில் இப்போது ரெஜினாவும் இணைந்துள்ளார். இவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை இப்போது மும்பையில் இயக்குனர்கள் படமாக்கி வருகின்றனர். இந்த தொடரின் தலைப்பு பற்றிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. பேக்ஸ் (fakes) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்