விஜய்யுடன் மோத முடிவு செய்துவிட்ட விஜய்சேதுபதி!

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (20:05 IST)
விஜய்சேதுபதியின் சமீபத்திய திரைப்படங்களான சீதக்காதி, சிந்துபாத் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து அவர் நடித்து வரும் மாமனிதன் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. 
 
இந்த நிலையில் விஜய்சேதுபதியின் இன்னொரு திரைப்படமான 'சங்கத்தமிழன்' படத்தை வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தீபாவளி தினத்தில் விஜய்யின் 'பிகில்' திரைப்படம் ரிலீஸ் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் விஜய்யுடன் மோத விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் கடந்த பொங்கல் தினத்தில் விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளியாகி இரண்டும் வெற்றி பெற்றது போல் 'பிகில்' வெற்றி அடைந்தாலும் 'சங்கத்தமிழன்' படமும் வெற்றி பெறும் என விஜய்சேதுபதி தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்களாம்
 
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்துள்ள இந்த படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிம்பு நடித்த 'வாலு' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்