விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது: எஸ்.ஏ.சந்திரசேகர்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (19:40 IST)
விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த சில வருடங்களாக விஜய்க்கு எதிரான கருத்துக்களை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்து வருகிறார். குறிப்பாக விஜய் பெயரில் அவர் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ் ஏ சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்துவிட்டது என்பதை விஜய்  சிந்திக்க வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை மீண்டும் இணைப்பது குறித்து பலமுறை விஜய்யுடன் பேசியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்