வில் ஸ்மித் ஸ்டைலில் ஒரு படம், அதில் விஜய் நடிக்க வேண்டும்: வெங்கட் பிரபு!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (14:04 IST)
வில் ஸ்மித் ஸ்டைலில் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை என்றும் அதில் விஜய் நடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு நீண்ட நாளாக இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்
 
இயக்குநர் வெங்கட்பிரபு சமீபத்தில் இயக்கிய மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இருப்பினும் அவர் அஜித் விஜய் படங்களை இயக்க தான் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்
 
 குறிப்பாக மங்காத்தா 2 படத்தை எடுத்த பெரும் முயற்சி செய்தபோதிலும் அவருக்கு அஜித் வாய்ப்பு வழங்கவில்லை. இதனை அடுத்து அவர் பார்வை தற்போது விஜய் பக்கம் திரும்பியுள்ளது
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த வெங்கட்பிரபு எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும் ஹாலிவுட்டில் வில் ஸ்மித் படங்களை பார்க்கும்போது எனக்கு விஜய் தான் ஞாபகம் வருவார் என்றும் வில் ஸ்மித் ஸ்டைலில் ஒரு படத்தை விஜய்யை வைத்து பண்ண வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை என்றும் அவர் கூறினார். ஆனால் இதற்கு விஜய் ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்