முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்?

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (13:40 IST)
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது. வழக்கம் போல் மற்ற விஜய் படங்களை போலவே 'மெர்சல்' படமும் கடந்த ஒரு மாதமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.



 
 
இந்த நிலையில் சென்சார் சான்றிதழ் இன்னும் தயாரிப்பாளரின் கைக்கு கிடைக்கவில்லை என்பதால் இந்த படம் தீபாவளி தினத்தில் வருமா? வராதா? என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் விஜய் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ரஜூ அவர்களும் இருந்தார். இந்த சந்திப்பின்போது 'மெர்சல்' படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து விஜய் பேசியதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்