விஜய் அண்ணாவ விட்டு கொடுக்க மாட்டோம்: ட்ரெண்டான #WeStandWithVIJAY

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (11:06 IST)
நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலியில் நடந்துக்கொண்டிருந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விஜய்யிடம் சம்மன் வழங்கி அவரை அங்கிருந்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.


ஒரே இரவில் விஜய்யின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு மற்றும் பனையூர் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய் வீட்டில் ரெய்டு நடந்திருப்பது குறித்து விஜய்யையும், விஜய் ரசிகர்களையும் விமர்சித்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமூக வலைதளங்களில் களம் இறங்கியுள்ள விஜய் ரசிகர்கள் #WeStandWithVIJAY #ThalapathyVijay போன்ற ஹேஷ்டேகுகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்