என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (16:22 IST)
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தின் பட்ஜெட் சேம்பிளே தயாரிப்பாளரை தலை சுற்ற வைத்துள்ளது.

 
அட்லீ ராஜா ராணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்-ஐ வைத்து தெறி படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் - அட்லீ கூட்டணியில் மெர்சல் உருவானது. இந்த இரண்டு படமும் பெரும் வெற்றி அடைந்தது.
 
படம் வெற்றி பெற்றாலும் அட்லீ மீது தயாரிப்பாளர்களுக்கு சற்று கோபம் உண்டு. படம் ஆரம்பத்திற்கு முன் ஒரு பட்ஜெட், படம் முடிக்கும்போது ஒரு பட்ஜெட் என அட்லீ இழுத்துவிடுவார். என்ன பன்றது அவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே.   
 
விஜய் - அட்லீ கூட்டணியில் அடுத்த படம் உறுதியாகியுள்ளது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய்க்கு ரூ.50 கோடி சம்பளம், அட்லீக்கு ரூ.22 கோடி சம்பளம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
அட்லீயின் ஆரம்பமே அதிரடியாக உள்ளது. பாவம் ஏ.ஜி.எஸ் நிறுவனம் என்று சினிமா வட்டாரங்களில் பலரும் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்