விஜய்யை மெர்சலாக்கிய யோகி பாபு!

வியாழன், 24 மே 2018 (15:46 IST)
கோலமாவு கோகிலா படத்தில் வரும் எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சுடி என்ற பாடலில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் யோகி பாபுவை பாராட்டியுள்ளார் விஜய்.
 
தமிழில் அரை டஜன் படங்களில் நடத்து வருபவர் யோகி பாபு. இவர் தற்போது விஜய் 62 படத்திலும், அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
 
இவர் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தின் எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சுடி என்ற வீடியோ பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் யோகிபாபு நயன்தாராவை ஒருதலையாக காதலித்து வருவது போல் காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டிருக்கும். மேலும், இதில் அவரது நடன காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், கோலமாவு கோகிலா படத்தின் பாடலில் சிறப்பாக நடித்ததற்காக யோகிபாபுவை பாராட்டியுள்ளார் விஜய். இதனால் சந்தோஷத்தில் உச்சத்தில் உள்ளார் யோகி பாபு.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்