இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து இன்றும் பல இடங்களில் போராட்டம், கடையடைப்பு என மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஜெயம்ரவி தனது ட்விட்டர் தளத்தில், ஒரு உயிரை எடுக்க இன்னொருத்தருக்கு யார் உரிமை கொடுத்தார்கள், அப்பாவி மக்களை கொன்ற இந்த விஷயத்தில் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதில் சட்டமே அரசாங்கமோ எவையும் மக்களின் நலன்/பாதுகாப்புக்காக வேண்டியே அவையே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால் எதற்கு ஒரு அரசாங்கம்? எனவும், நியாபகம் இருக்கட்டும் கடைசித் தமிழனின் இரத்தம் எழும் வீழாதே என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.