அமீர் இயக்கத்தில் விஜய்?

செவ்வாய், 22 மே 2018 (17:12 IST)
அமீர் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது. 
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், ‘தளபதி 62’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்குப் பிறகு, விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என கோடம்பாக்கத்தில் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்,  விஜய்யின் 63வது படத்தை அமீர் இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமீரின் கனவுப் படமான ‘கண்ணபிரான்’ படத்தில் விஜய் நடிக்கப்  போவதாகச் சொல்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்