போலந்தில் ரொமான்ஸ் செய்த விஜய் – காஜல்

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (15:39 IST)
‘விஜய் 61’ படத்திற்காக, போலந்து நாட்டில் விஜய்யும், காஜல் அகர்வாலும் ரொமான்ஸ் செய்த பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.


 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘விஜய் 61’. விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் விஜய்யுடன் டூயட் பாடுகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
டாக்டர்களாக நடிக்கும் விஜய் மற்றும் காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள், ஐரோப்பாவில் படமாக்கப்பட்டு வந்தன. அவர்களுடன், வடிவேலும் நடித்துள்ளார். டயலாக் போர்ஷன் மட்டுமல்லாது, விஜய் – காஜல் ரொமான்ஸ் செய்யும் பாடலையும் போலந்தில் படமாக்கியுள்ளனர். அங்கு ஷூட்டிங் முடிந்ததையொட்டி, ஜூன் முதல் வாரம் சென்னை திரும்புகிறது படக்குழு.
அடுத்த கட்டுரையில்