இந்த 5 நாளும் பிரசவ வலிதான்… விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சி பதிவு!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (17:13 IST)
காத்து வாக்குல ரெண்டு காதல் ரிலீஸை ஒட்டி கடைசி கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இந்த படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி இணையத்தில் வைரலானது. இதையடுத்து படத்தின் ரிலீஸூக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் இறுதிகட்ட எடிட்டிங் பணிகளில் இசையமைப்பாளர் அனிருத்திடன் இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

மேலும் இதுபற்றி பேசியுள்ள அவர் விக்னேஷ் சிவன் “ பட ரிலீஸூக்கான இந்த கடைசி ஐந்து நாட்கள் பிரசவ வலியைத் தருபவை. ஆனால் அந்த வலி வொர்த் ஆனதுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்