பிக்பாஸ் வீட்டில் 'முடிஞ்சா உடைச்சுப் பாரு" என்று பெயரிடப்பட்ட டாஸ்க் ஒன்று கொடுக்கபட்டது. போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து, பலூன்களை ஊதி போர்டில் ஒட்ட வேண்டும் என்பதுதான் அது.
டாஸ்க்கின்படி இரண்டு பேர் ஒட்டுவதில் ஈடுபட, எதிரணி நபர் அவர்கள் ஒட்டாதவாறு தடுத்து பலூன்களை உடைப்பார். இதையும் மீறி எத்தனை பலூன்களை போர்டில் ஒட்டப்படுகிறதோ அதற்கு மதிப்பெண்கள் கிடைக்கும். இதில் மூன்று சுற்றுகள் நடைபெறும் என அறிவித்தார் பிக்பாஸ். இந்த போட்டியில் ஆரவ், பிந்து, சிநேகன் ஒரு அணியாகவும், சுஜா, ஹரிஸ், கணேஷ் மற்றொரு அணியாகவும் போட்டியை ஆரம்பித்து, ரணகளமான போட்டியாக மாறியது. போட்டியாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் வகையில் இருந்தது.
பிறகு பிக்பாஸ் விதியில் சற்று மாற்றத்தை அறிவித்தார். அதில் 'போர்டில் பலூனை ஒட்டிய பிறகு உடைக்கக்கூடாது'. சிநேகன் மற்றும் சுஜா, ஹரிஷ் விளையாடியது விளையாட்டாக அல்லாமல் சண்டையாக அமைந்தது எனலாம். ரணகளமான இந்தப் போட்டி முடிவிற்கு வந்தது. அதில் கணேஷ், சுஜா, ஹரிஷ் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார் பிக்பாஸ்.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஆரவ்வின் புலம்பல் அதிகமாக இருந்தது. அதில் 'வெச்சு செஞ்சிட்டாங்களே' என்பது போல பிந்துவிடம் பேசிகொண்டிருந்தார். 'இதுல ஜெயிச்ச காசெல்லாம் ஆஸ்பத்திரி செலவுக்கே சரியாயிடும் போல இருக்கே. கதவைத் தொறந்தப்பவே போயிருக்கலாம். மக்கள் நம்ம பிடித்துபோய் வைத்திருக்கிறார்கள் என நினைத்தேன் ஆனால் இப்போதுதான் தெரிகிறது, இவனுங்கதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்கன்னு நம்மை பிடித்து வைத்திருக்காங்கனு என்றெல்லாம் புலம்பினார்.
நல்லவேளையாக வையாபுரி இதற்கு முன் வெளியேறி விட்டார். இப்போது தொலைக்காட்சியில் அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது 'அப்பாடா.. தப்பிச்சம்டா.. சாமி என்று ஆறுதல் அடைந்திருப்பார் என்று சொன்னார். இனி போட்டிகள் கடுமையாக இருக்கும் என்பது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.