பாலாஇயக்கத்தில்விக்ரம்மின்மகன்துருவ்விக்ரம்நடித்துள்ளபடமானவர்மாகாதலர்தினத்தன்றுவெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டட் நிலையில் மார்ச் மாதத்திற்குத் தள்ளிப் போகியுள்ளது
கடந்த ஆண்டில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படமான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியில் விஜய் தேவரகொண்டாவின் கதாப்பத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்க, தமிழ் ரீமேக்கான வர்மா படத்தின் மூலம் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் அடையாளமாகக் கருதப்படும் இயக்குனர்களில் ஒருவரான பாலா இயக்குகிறார். தன் நண்பர் விக்ரம்முக்காக முதல் முறையாக ரீமேக் படமொன்றை அவர் இயக்கியுள்ளார். காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
ஆனால் காதலர் தினத்தன்று தேவ், 100 % காதல் ஆகிய இருப் படங்கள் ரிலிஸாவதால் போதுமான தியேட்டர்கள் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. மேலும் வர்மா திரைப்படம் விலங்குகள் நல வாரியத்தில் இருந்து இன்னும் தடையில்லாச் சான்றிதழ் பெறாத காரணத்தினாலும் காதலர் தினப் போட்டியில் இருந்து விலகி இப்போது மார்ச் மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளது.