வனிதாவுக்கு ட்ரம்ப் அனுப்பிய பரிசு … அப்படி என்ன செய்தார்?

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (10:39 IST)
நடிகை வனிதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்து நன்றி மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நடிகர் விஜய்குமாரின் மகளான வனிதா சர்ச்சைகளை தன்னை சுற்றி பரப்பிக் கொண்டு வாழ்பவர். சமீபத்தில் அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டது தொடர்பாக பலரும் கருத்துகளை தெரிவிக்க அவர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி இப்போதுதான் பீஸ் மோட்க்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த புகைப்படம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ’வனிதாவிடம் அமெரிக்காவின் வீழும் பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் நீங்கள் செய்த காரியத்துக்காக இந்த பரிசை உங்களுக்கு அனுப்பியுள்ளோம் ’ என எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கே உதவி செய்யும் வகையில் வனிதா அப்படி என்ன செய்தார் என்ற கேள்வி ரசிகர்களின் மண்டையை குடைய ஆரம்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்