வலிமை, இந்தியன்-2 பட சிறுவனின் தயார் மரணம் !

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (21:05 IST)
வலிமை படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் சிறுவனின் தயார் இன்று காலமானார். அவருக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை ராயபுரத்தில் வசித்துவருபவர் முபாரக்.இவரது மனைவி யாஷ்மின். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த தம்பதியின்  குழந்தை ஆலன்(10). இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்துள்ளார். அடுத்து அஜித் படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கர்ப்பிணி யாஷ்மின் உள்ளிட்ட  முபாரக் வீட்டில் அனைவருக்கும் கொரோனா தொற்றுப் பரவியது.  இதில்  யாஷ்மினி உடல் மோசம் அடைந்ததது இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு மருத்துவ செலவு சில லட்சங்கள் ஆகியுள்ளது. சிலர் சமூகவலைதளங்கள் மூலம் முபாரக் குடும்பத்திற்கு ரூ.9 லட்சம் கொடுத்து உதவினர். ஆனால் யாஷ்மின் நுரையீரலில் 80% தொற்று அதிகரித்ததால்,  அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தையை மருத்துவர்கள் சிசேரியன் செய்து காப்பாற்றினர். ஆனால் யாஷ்மின் உயிரிழந்தார்.

தற்போது ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முபாரக்.  அவரது நண்பர்கள் சிலர் இணைந்து யாஷ்மின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.  மேலும்  ஆலன் இந்தியன் 2 படத்தில் நடித்தபோது இன்னும் அவரது சம்பளம் கொடுக்கப்படாமல் உள்ளதால் அதை கொடுக்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்