மெர்சல் படப்பிடிப்பில் பலத்த காயமடைந்த வடிவேலு

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (15:20 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் படப்படிப்பில் நடிகர் வடிவேலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை சென்றுள்ளது.


 

 
தெறி வெற்றிக்கு பின் அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய் 3 கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் 3 நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 
 
படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் நடிகர் வடிவேலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம்.
 
வடிவேலு  நீண்ட காலத்துக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் காமெடியனாக வந்தார். தற்போது தனது மார்க்கெட்டை பிடிக்க பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மெர்சல் படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.
 
அடுத்த கட்டுரையில்