‘வாடிவாசல்’ ஸ்டார்ட்ஸ்: ஜிவி பிரகாஷின் டுவிட் வைரல்

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:13 IST)
சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே
 
‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் சற்று முன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் ‘வாடிவாசல்’ படத்தின் பாடல்கள் கம்போஸ் செய்ய தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
‘வாடிவாசல்’ படத்தில் தெறிக்க வைக்கும் அளவிற்கு பாடல்களை கம்போஸ் செய்யுங்கள் என்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை இயக்கி முடித்த உடன் அவர் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்