தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர் புச்சிபாபு சனா. இவர் இயக்கத்தில் 2020 ஆம் ஆம் ஆண்டு வெளியான படம் உப்பென்னா. இப்படத்தில் விஜய்சேதுபதி, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
இந்த நிலையில், அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் புஷ்பா. இப்படம் 370 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் இயக்கி வரும் படம் புஷ்பா-2. இப்படத்தின் திரைக்கதைக்கு உப்பென்னா பட இயக்குனர் புச்சிபாபு சனா உதவி செய்வதாக தகவல் வெளியாகிறது...
இதுகுறித்து புச்சிபாபுவிடம் கேள்வி ழுப்பப்பட்டது. இதற்கு, அவர் , நானும், சுகுமானும் இணைந்து எடுத்த புகைப்படத்தால் இந்த வதந்தி பரவுகிறது. ஆனால், சுகுமாருக்கு உதவும் அளவுக்கு நான் பெரிய ஆளில்லை என தெரிவித்துள்ளார்.