அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரூ.375 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் முதல் பாகத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளில் மட்டுமே வந்த பஹத் ஃபாசில் கதாபாத்திரம், அடுத்த பாகத்தில் அதிக முக்கியத்துவம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மொத்தமாக 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் பஹத் ஃபாசில்.
இந்த நிலையில், புஷ்பா படம் குறித்து, நடிகர் பகத்பாசில் கூறியுள்ளதாவது: புஷ்பா எடுக்கும்போது, இயக்குனர் சுகுமாருக்கு புஷ்பா 2 இருக்கும் எண்ணமில்லை. ஆனால், காவல் நிலைய காட்சிகளுக்குப் படமாக்கிய பின்புதான் அவருக்கு பார்ட் -2 எடுக்கும் திட்டம் உருவானது.