அனுஷ்கா படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (11:31 IST)
அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
அசோக் இயக்கத்தில், அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாகமதி’. தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தியில் ரிலீஸாகும் இந்தப் படத்தில், உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்துள்ளார். சஞ்சனா என்னும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அனுஷ்கா நடித்துள்ளார்.
 
ஜெயராம், ஆஷா சரத், ஆதி பின்னிசெட்டி, வித்யுலேகா ராமன், தலைவாசல் விஜய் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா வெளியிடுகிறார்.
 
ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்