நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கிளிகள்: வனத்துறை அதிரடி நடவடிக்கை..!

புதன், 15 பிப்ரவரி 2023 (19:56 IST)
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கிளிகள்: வனத்துறை அதிரடி நடவடிக்கை..!
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதி இன்றி வளர்க்கப்பட்டு வந்த கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர் என்பதும் இவரது வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் தனது வீட்டில் அனுமதி இன்றி இரண்டு கிளிகள் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
அலெக்ஸ்சாண்டரியன் என்ற பச்சை நிற கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்ததாகவும் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கிளிகள் கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் அனுமதி இன்றி கிளிகள் வளர்த்த ரோபோ சங்கர் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்