தை அமாவாசை: சதுரகிரியில் பக்தர்களுக்கு எத்தனை நாள் அனுமதி?

புதன், 18 ஜனவரி 2023 (20:52 IST)
ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் தை அமாவாசை தினத்தில் நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
தை அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் அதாவது ஜனவரி 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையில் தரிசனம் செய்யலாம் என வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது 
 
நாளை பிரதோஷ வழிபாடு மற்றும் 21ஆம் தேதி தை அமாவாசை தினத்தில் அதிக பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும் கோவிலுக்கு வருபவர்கள் ஓடைகளில் குளிக்க கூடாது என்றும் இரவில் தங்க அனுமதி இல்லை என்றும் 60 எதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதி கிடையாது என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்