சிங்கிள் பட் டேக்கன் – திரிஷாவின் லவ் ஸ்டேட்டஸ் !

Webdunia
திங்கள், 27 மே 2019 (18:05 IST)
திரிஷா சமூகவலைதளங்களில் தன்னுடைய லவ் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு ருசிகரமான பதில் அளித்துள்ளார்.

கிட்டதட்ட 20 வருடங்களாக தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் திரிஷா இன்னமும் உச்சநாயகியாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நாயகர்களோடும் ஜோடி சேர்ந்துவிட்ட திரிஷா இப்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அதிகமாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் ராங்கி எனும் படம் உருவாகி வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து தனது டிவிட்டரில் அந்த போஸ்டரை வெளியிட்ட த்ரிஷாவிடம் ரசிகர்கள் அவரது லவ் ஸ்டேட்டஸ் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ‘சிங்கிள் பட் டேக்கன்’ எனப் பதிலளித்துள்ளார்.

திரிஷா கடந்த காலங்களில் ராணா மற்றும் தொழில் அதிபர் வருண் மணியன் ஆகியோருடன் காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்