ட்விட்டர், இன்ஸ்டாவிலிருந்து விலகிய த்ரிஷா! – காரணம் இதுதானாம்!

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (13:18 IST)
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக இயங்கி வருபவரான நடிகை த்ரிஷா சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் த்ரிஷா. சில காலமாக இவரது படங்கள் அவ்வளவாக பேசப்படாத நிலையில் வெளியான “96” படம் மீண்டும் இவரை புகழ்பெற செய்தது. தொடர்ந்து தமிழில் படங்கள் நடித்து வரும் த்ரிஷா சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் அவ்வப்போது தன் படங்களை பதிவிட்டு வந்தார். சமீபத்தில் டிக்டாக்கில் கூட இவரது வீடியோக்கல் வைரலாக தொடங்கின.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அவர் ”சில விஷயங்களை நான் மறக்க விரும்புகிறேன். அதனால் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற போதை தரும் சமூக வலைதளங்களிலிருந்து சில காலம் விலகி இருக்க உள்ளேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன். எல்லாரும் தனித்திருங்கள், பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்