'தளபதி 67’ படத்தில் த்ரிஷா.. அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (14:10 IST)
'தளபதி 67’ படத்தில் த்ரிஷா.. அதிகாரபூர்வ அறிவிப்பு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு காஷ்மீரில் நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான்,  மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிகை இருப்பதாக நேற்று அறிவிப்பு வ் எளியானது.
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிகை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் விஜயுடன் நடிகை த்ரிஷா கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய நான்கு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு ஐந்தாவது முறையாக விஜய்யுடன் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த அறிவிப்பை அடுத்து மேலும் சிலர் இந்த படத்தில் இணைய உள்ளது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்