கபாலிக்கு ஆகாயத்திலும் விளம்பரம்

Webdunia
சனி, 11 ஜூன் 2016 (12:50 IST)
இன்றைய தேதியில் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் கபாலி. இந்தப் படத்துடன் எந்தவகையிலாவது சம்பந்தப்பட வணிக நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.


 
 
இப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக பிரபல விமான நிறுவனமான ஏர் ஏசியா இணைந்துள்ளது. இதனை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவே உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ஏர் ஏசியா நிறுவனத்தின் விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏர் ஏசியா நிறுவனத்தின் விமானங்களில் கபாலி படத்தின் புரொமோஷன்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
 
கபாலியின் பாடல்கள் நாளை வெளியாகிறது. படம் அடுத்த மாதம் 15 -ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கபாலியை விளம்பரப்படுத்த முன்வரலாம்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்