''உங்களின் பிரார்த்தனையின் மூலம் நான் குணமடைந்து வருகிறேன்'' - நடிகர் அமிதாப்பச்சன்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (22:55 IST)
உங்களின் பிரார்த்தனையின் மூலம் நான் குணமடைந்து வருகிறேன் என்று  நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ப்ராஜெக்ட் கே. அவருக்கு ஜோடியாக  தீபிகா படுகோன் நடிக்கிறார்.

இப்படத்தில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில்  நடிக்கிறார். சமீபத்தில்,  இப்படப்பட ஷூட்டிங்கின்போது, ஒரு சண்டை காட்சியில், அமிதாப் பச்சனுக்கு விபத்து ஏற்பட்டது.

இதில், இடுப்புப் பகுதியில் காயமடைந்த அமிதாப் பச்சனை உடனடியாக ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வலது விலா எலும்பில் முறிவும், தசை நார்கள் கிழிந்ததாகக் கூறி, அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

ஓய்வில் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை கூறிய நிலையில், அவர் வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று அவர்  தன் சமூக வலைதளைத்தில்,' மூச்சுவிடும்போது, நடக்கும்போது வலியேற்படுகிறது. இயல்புநிலைக்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகும். உங்களின் பிரார்த்தனைகளின் மூலம் நான் குணமடைந்து வருகிறேன்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்