அஜித்குமார் நடிப்பில் தற்போது வேகமாக உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.#RidersStory
ஆனால் அஜித் ரசிகர்கள் அப்டேட்டுக்காக தினமும் படக்குழுவினரிடம் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,இதே மா கதா என்ற தெலுங்குப் பட டீசரைப் பார்த்த நடிகர் அஜித்குமார் அவர்களைப் பாராட்டியுள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அஜித் கூறியுள்ளதாவது: என் நண்பர் ராம் பிரசாத் இப்படத்தின் டீசரை என்னிம் காட்டினார்.எனக்கு இந்த டீசர் பிடித்திருந்தது. இதில் வரும் பைக் ரைடிங் எனக்குப் பிடிதிருந்ததால் என்னை அதனோடு தொடர்பு படுத்திக்கொண்டேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.