சிவகார்த்திகேயனின் ரெமோ படத்துக்குதான் இப்போது அதிக எதிர்பார்ப்பு. ரெமோவின் கோவை ஏரியாவை வாங்கி விற்பனையை முதலில் தொடங்கி வைத்தார், திருப்பூர் சுப்பிரமணியன்.
ஒரே நாளில் படத்தின் மற்ற ஏரியாக்களும் விற்பனையாகியுள்ளன.
மதுரை மற்றும் ராமநாடு ஏரியா விநியோக உரிமையை ஜி.என்.அழகர் சாமியும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியா விநியோக உரிமையை பிரான்சிஸ் அடைக்கலராஜும், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஏரியா விநியோக உரிமையை ஜி.ஸ்ரீனிவாசனும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா விநியோக உரிமையை பிரதாப் ராஜாவும் வாங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்