ஜார்ஜியாவில் முகாமிட்ட லெஜண்ட் சரவணன் பட ஷூட்டிங்!

vinoth

திங்கள், 9 டிசம்பர் 2024 (11:44 IST)
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் வெளியாகி கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. அதே போல எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது.

இதையடுத்து அவர் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்ன்ர் ரிலீஸான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்த படம் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

சென்னையில் தொடங்கிய ஷூட்டிங் அடுத்தகட்டமாக தூத்துக்குடியில் சில நாட்கள் நடந்தது. இந்த படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சரவணன் “இந்த படம் தூத்துக்குடி துறைமுகத்தை மையப்படுத்திய ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா மற்றும் ஷாம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஹீரோயினாக பாயல் ராஜ்புத் நடிக்கிறார். படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்