‘தி கிரே மேன் பார்ட் 2 வருகிறது’… பீதியைக் கிளப்பிய இயக்குனர்கள்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (10:00 IST)
ஹாலிவுட் படமான தி கிரே மேன் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்போடுதான் படம் தொடங்கப்பட்டது. தி கிரே மேன் படத்தில் தனுஷை பார்க்க இந்திய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நெட்பிளிக்ஸில் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக வெளியானது தி கிரே மேன். ஆனால் ரசிகர்களை திருப்திப் படுத்தவில்லை. மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்தியாவில் தனுஷுக்காக படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு “மை செக்ஸி தமிழ் பிரண்ட்” என்ற வசனம்தான் மிஞ்சியது. ‘வாம்மா மின்னல் போல’ வந்து போனார் தனுஷ். இப்படி மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக பார்வையாளர்களால் இந்த படம் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக இயக்குனர்கள் ‘ரஸ்ஸோ பிரதர்ஸ்’ தெரிவித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்