அதுக்காகத்தான் நயன்தாராவை பிடிக்கும்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (10:39 IST)
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் அசுர வேகத்தில் முதலிடம் நோக்கி நகர்கிறவர், கீர்த்தி சுரேஷ். மலையாளிகளுக்கு ஒரு குணம் உண்டு.


 


யாரை பிடிக்கும், எந்த உணவு பிடிக்கும் என்று எதைக் கேட்டாலும் பதில் மலையாள பிளேவருடன்தான் இருக்கும். லட்சுமிமேனனிடம் திருமணம் பற்றி கேட்ட போது, ஒரு மலையாளியைதான் திருமணம் செய்வேன் என்றாரே... அதுபோல.
 
கீர்த்தி சுரேஷிடம் உங்க ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்.... ஆச்சரியமேயில்லை, எதிர்பார்த்ததுதான். நயன்தாரா.
 
ஆனால், அதற்கு அவர் சொன்ன காரணம் நியாயமானது. இந்தியில் எவ்வளவு வாய்ப்புகள் வந்த பிறகும் தென்னிந்திய சினிமாவைவிட்டு இந்திக்கு போகலை பாருங்க... அதனாலேயே எனக்கு நயன்தாராப் பிடிக்கும் என்றார்.
 
அதாவது, கீர்த்தி சுரேஷை அந்த ஷாருக்கானே கூப்பிட்டாலும் இந்தியில் நடிக்க மாட்டாராம். சரிதானே மேடம்?
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்