தனி ஒருவன் 2 ஜெயம் ரவியின் 25 -வது படம்

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (12:11 IST)
மோகன் ராஜாவுக்கும், ஜெயம் ரவிக்கும் சென்சேஷனல் ஹிட்டாக அமைந்தது, தனி ஒருவன். அப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்பது அனைவரது கேள்வியாகவும் இருந்து வந்தது.


 


அதற்கு மோகன் ராஜா பதிலளித்துள்ளார்.
 
தனி ஒருவன் 2 -வது பாகம் கண்டிப்பாக வரும். அது ஜெயம் ரவியின் 25 -வது படமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
 
ஜெயம் ரவி தற்போது லக்ஷ்மண் இயக்கத்தில், போகன் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து கௌதம், சக்தி சௌந்தர்ராஜன், ஏ.எல்.விஜய், சுசீந்திரன் ஆகியோரது இயக்கங்களில் நடிக்க உள்ளார். மோகன் ராஜா இயக்கும் படமும் இதில் அடக்கம்.
 
மோகன்ராஜா அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்