ரஜினியால் தள்ளிப்போகும் தளபதி 65? அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:10 IST)
அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தளபதி 65 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது.

‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இந்த படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்ப்பு டிசம்பர் 10ல் வெளியானது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. விரைவில் தொடங்க உள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அதே சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தளபதி 65 படம் தீபாவளிக்கு ரிலிஸாகாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்