'தளபதி 65’ நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா: அதிர்ச்சியில் படக்குழுவினர்

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:06 IST)
தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு மே மாதம் 2-வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் நாயகி பூஜா ஹெக்டே குறித்த காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டது 
 
இந்த நிலையில் திடீரென 'தளபதி 65’நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பூஜா ஹெக்டே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
எனக்கு ஒரு வெற்றி உறுதியாகி உள்ளது. இதனால் வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டேன். கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளையும் நான் பின்பற்றி வருகிறேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் 
 
பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தளபதி 65 படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்