பனியனில் குத்தாட்டம் போட்ட விஜய் - வைரலாகும் ஷூட்டிங் வீடியோ!

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (14:57 IST)
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார். சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் 2020ம் ஆண்டின் கோடைவிடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்தது.  விக்ரம் வேதா , பேட்ட போன்ற படங்களில் வில்லனாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி தளபதி 64ல் வில்லனாக நடிக்கவுள்ளார். மேலும் விஜய்யின் மாணவராக சாந்தனு நடிக்கவுள்ளார். 


 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படக்குழுவினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஷூட்டிங் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. லீக்கான அந்த வீடியோவில் நடிகர் விஜய் பனியனுடன் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு நடனமாடுகிறார்.  ஷூட்டிங் ஆரமித்த 6 நாளில் படத்தின் காட்சிகள் கசித்துள்ளதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்