'தளபதி 63' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இப்படித்தான் இருக்கும்: தயாரிப்பாளர் தகவல்

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (09:14 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பின்னி மில்லில் தொடங்கி அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் 'கத்தி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் போன்று வித்தியாசமாக போஸ்டராக உருவாகி வருவதாகவும் விரைவில் இந்த போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர்  அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தளபதியின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், நயன்தாரா, பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்பாபு, தீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்