தெலுங்கு ரீமேக் அரவிந்த்சாமி கேரக்டரில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (17:23 IST)
எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் அஸ்வின் சரவணகுமார் இயக்கத்தில் ‘இறவாக்காலம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 'போகன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிகர் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான படம் போகன். தமிழில் வெற்றிபெற்ற இந்தப் படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்யும் இப்படத்தில் ஜெயம் ரவி கேரக்டரில் ரவி தேஜா நடிக்க, ஹன்சிகா கேரக்டரில் கேத்ரின் தெரேசா நடிக்கிறார்.
 
அரவிந்த் சாமி கேரக்டரில் நடிக்க, எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகாவும் இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள் படக்குழுவினர். தெலுங்கில் கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள் எனவும்  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்