வெளியானது நரப்பா தெலுங்கு பட ட்ரெய்லர்! – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (12:37 IST)
அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நரப்பா திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே

இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஜூலை 20ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த சிவசாமி கதாப்பாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்