48 மணிநேரத்தில் டீசர் … அஜித் பட தயாரிப்பாளர் டுவீட்

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (19:29 IST)
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தெலுங்கு  பவர் ஸ்டாரும், அரசியல்வாதியுமான பவன்கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள வக்கீல் சாஹிப்.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்திற்கு இதுவரை அப்டேட் வரவில்லை என அஜித் ரசிகர்கள் தினம்தோறும் இயக்குநரிடமும் தயாரிப்பாளர் போனி கபூரிடமும் கேட்டு வருகின்றனர்.

ஆனால் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதால் இதற்கான அப்டேடுகள் வருவதில் தாமதமாகிறது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பவர்ஸ்டார் பவன்கல்யான் நடிப்பில் உருவாகி வரும் படம் வக்கீல் சாஹிப். இப்படத்தைக் குறித்து தயாரிப்பாளார் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வக்கீல் சாஹீப் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என ஒரு போஸ்டர் வெளியிட்டார்.

இது வைரலாகி வருகிறது. வக்கீல் சாஹிப் படத்தை  சாய்ராம் வேணு இயக்கியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இப்போதும் அப்டேட் வரவில்லை என அஜித் ரசிகர்கள் மீண்டும் வருத்தத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்