திரைத்துறையினர்களுக்கு மற்ற மாநிலங்கள் வரியை குறைத்த போதிலும் தமிழக அரசு மட்டும் வரியை நீக்க பிடிவாதமாக இருப்பதற்கான உண்மையான காரணம் தற்போது வெளிவந்துவிட்டது.
திரைப்படத்திற்கு 30% வரி என்று அறிவித்தால்தான், வரிவிலக்கு பெற லஞ்சம் பெற முடியும் என்பதே அரசியல்வாதிகளின் எண்ணமாக உள்ளது. வெறும் ஜிஎஸ்டி என்றால் திரைப்படத்திற்கு வரிவிலக்கு கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். இதனால் கோடிக்கணக்கில் வரும் லஞ்ச வருமானம் நின்றுவிடும் என்று தயாரிப்பாளர்கள் போட்டு உடைத்துள்ளனர்.
மேலும் தயாரிப்பாளர்கள் தற்போது வெளிப்படையாகவே வரிவிலக்கு பெற எந்தெந்த படத்திற்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தோம் என்பதை ஓப்பனாகவே பேச ஆரம்பித்துவிட்டனர். 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்திற்கு 4.50 லட்சம், வனமகன் படத்திற்கு 15 லட்சம், காற்று வெளியிடை படத்திற்கு 60 லட்சம் ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு ஒரு கோடி, என்று வரிவிலக்கு பெற்றதற்கான லஞ்சத் தொகையை போட்டு உடைத்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.
பொன் முட்டையிடும் வாத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தமிழக அரசு 30% வரி விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.