தரமணி.... உலகமயமாக்கலும், ஆண் பெண் உறவும்

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (14:36 IST)
ராம் இயக்கியிருக்கும் தரமணி படத்தின் ட்ரெய்லர் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றுள்ளது.


 


நசுரூதீன் ஷா நடிப்பில் இந்தியில் வெளியான பழைய படம் ஒன்றில் தரமணியில் வரும் காட்சிகள் அனைத்தும் இருப்பதாக இணையத்தில் சர்ச்சை ஒன்றும் கிளம்பியுள்ளது. 
 
இந்நிலையில், தரமணியின் மையச்சரடு எது என்பது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்கு ராம் பேட்டியளித்தார்.
 
உலகமயமாக்கலும், அதன் விளைவால் ஆண் பெண் உறவில் ஏற்பட்ட பாதிப்பையும் மையமாகக் கொண்டு தரமணி தயாராகியிருப்பதாக அவர் பேட்டியில் கூறியுள்ளார். மேலும், இதுவொரு சர்வதேச தரத்திலான கதை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
சாமானிய ரசிகன் தாங்குவானா?
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்