தமிழ் சீரியலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (13:30 IST)
கைநிறைய படங்கள் வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 
 
பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வெப் சீரியல் ‘ஆஸ் ஐ யாம் சஃப்பரிங் ப்ரம் காதல்’. இணையதளத்துக்கு சென்சார் கிடையாது. இதனால், ஏகப்பட்ட கெட்டவார்த்தைகளுடன் வெளியாகி ஹிட்டடித்தது இந்த சீரியல். இதன் வெற்றியைத்  தொடர்ந்து, வெப் சீரியலுக்கு தமிழில் மவுசு அதிகரித்துள்ளது.
 
அந்த வகையில், ‘ஜி ஸ்பாட்’ என்ற வெப் சீரியலில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதன் ஷூட்டிங் ஏற்கெனவே தொடங்கி  நடைபெற்று வருகிறது. மியூஸிக் சேனல் ஒன்றில் பணியாற்றிய விஜய் ரமேஷ், இந்த சீரியலை இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமின்றி, வேறு சில பிரபலங்களும் இந்த சீரியலில் நடிக்கின்றனர். பெண்களுக்கான பிரச்னைகளை வெளிப்படையாகவும், ஓப்பனாகவும் இந்த சீரியலில் சொல்லப் போகிறார்களாம்.
 
தற்போது ‘துருவ நட்சத்திரம்’, ‘வடசென்னை’, ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய படங்களில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த வெப் சீரியலில் நடிக்க ஒத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம்.
அடுத்த கட்டுரையில்