தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் திரையுலகினருக்கு கிடைத்த கவுரவம்!!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (13:43 IST)
64வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள தேசிய பத்திரிக்கையாளர் அரங்கத்தில் நடந்தது.


 
 
இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்தது. இதில் தமிழ் திரையுலகினரும் கவுரவப்படுத்தப்பட்டனர்.
 
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் குக்கூ புகழ் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜோக்கர் படம் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
 
இதே படத்தில் பின்னணி பாடிய சுந்தர ஐயருக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருதும் கிடைத்துள்ளது.
 
தர்மதுரை படத்தில் ’எந்த பக்கம்’ என்ற பாடலை எழுதியதற்காக சிறந்த பாடலாசிரியராக வைரமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். 
 
சிறந்த ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றிற்காக இரண்டு தேசிய விருதுகளை 24 படம் தட்டிச்சென்றது. 
 
சிறந்த கதையாசிரியாக ஜி.தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்