திரைப்படங்களின் ஓடிடி வெளியீடு… திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (14:54 IST)
தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் தற்போது பல்வேறு காரணங்களுக்காக ஸ்ட்ரைக் நடந்து வருகிறது. இதனால் தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ்ப் படங்களின் ஷுட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தமிழ் சினிமாவிலும் அது போல ஸ்ட்ரைக் அறிவிக்கப்படுமோ என்ற ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படங்கள் ஓடிடிகளில் 28 நாட்கள் கழித்து வெளியாகின்றன. ஆனால் அதை இரண்டு மாதமாக மாற்ற வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது போல நடிகர் நடிகைகளின் சம்பளம்,  மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி ஆகியவற்றைக் குறித்து ஆலோசிக்க ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சேலத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஸ்ட்ரைக் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்