மலையாள சினிமா விருது கமிட்டியில் தமிழ் நடிகை

வியாழன், 30 செப்டம்பர் 2021 (23:30 IST)
மலையாள சினிமாக்களுக்கு விருது வழங்கும் கமிட்டியில் பிரபல நடிகை சுகாசினி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர் மணிரத்னம். இவரது மனைவியும் இயக்குநருமான சுகாசினி மலையாள சினிமாக்களுக்கான விருது கமிட்டிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு வெளியான சிறந்த படங்களைத் தேர்வு செய்வதற்கான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கமிட்டியின் தலைவராக நடிகை சுகாசினி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்