நிவின் பாலி படத்தைத் தயாரிக்கும் தமிழ் நடிகர்

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (13:15 IST)
நிவின் பாலி நடிக்கவுள்ள தமிழ்ப் படத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.
 


 

சிவகார்த்திகேயனின் மேனேஜராக இருந்த ஆர்.டி.ராஜா, ’24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, படங்களைத் தயாரித்து வருகிறார். இது ஆர்.டி.ராஜாவின் நிறுவனம் என்று சொல்லப்பட்டாலும், சிவகார்த்திகேயனின் பினாமிதான் அவர் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’, தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஆகியவற்றைத் தயாரித்த இந்நிறுவனம், தற்போது நிவின் பாலியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கிறது.

ப்ரியதர்ஷன் மற்றும் சந்தோஷ் சிவனிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரபு ராதாகிருஷ்ணன், இந்தப் படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா, இந்தப் படத்திற்கு கதையும் எழுதியுள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில், ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்