மாடர்ன் உடையில் தமன்னாவின் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth

செவ்வாய், 19 மார்ச் 2024 (15:18 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார்.

சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹிட்டானது. காதலர் விஜய் வர்மாவுடன் வசித்து வரும் தமன்னா பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். சமூகவலைதளங்களில் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் இப்போது வித்தியாசமான சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்