கொரோனா பரவல் எதிரொலி… சூர்யவன்ஷி பட ரிலீஸ் ஒத்திவைப்பு!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (09:05 IST)
அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கான் மற்றும் ரண்வீர் சிங் இணைந்து நடித்துள்ள சூர்ய வன்ஷி திரைப்படத்தின் ரிலிஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது பாலிவுட் நடிகர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் அக்‌ஷய்குமார் மற்றும் அவரோடு படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியானது.

கொரோனா பரவல் அதிகமாகும் நிலையில் பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. இதனால் திரையரங்குகளுக்குக் கூட்டம் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அக்‌ஷய் குமார், ரண்வீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் இயக்கத்தில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சூர்யவன்ஷி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக சூர்யவன்ஷி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்